CV Shanmugam on MK Stalin : ”யாருக்கு யாரு அப்பா? முடிஞ்சா கேஸ் போடு” விளாசிய சிவி சண்முகம்
CV Shanmugam : திமுக ஆட்சியில் மாணவிகளை பள்ளி அனுப்ப முடியவில்லை தினமும் கற்பழிப்பு பாலியல் சம்பவம் தான் நிகழ்கிறது திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
Continues below advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
Source : ABP NADU
விழுப்புரம் : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு அல்வா தான் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்திருப்பதாகவும், டிஜிபி சங்கர்ஜிவால் வந்த பிறகு தான் தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள அசோகபுரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. நலத்திட்ட விழா வழங்கும் மேடையில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், அதிமுகவில் நிதி வசூலிக்கும் பழக்கமே கிடையாது ஆனால் மற்ற கட்சிகளில் நோட்டை எடுத்து கொண்டு வசூலிக்க வந்துவிடுவார்கள் அதனை துவக்கி கைத்ததே திமுக தான் கோபாலபுரத்து குடும்பம் தான் என்றும் ஆளும் கட்சியாகவும், இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் சரி மக்களை சந்திக்கும் இயக்கமாக அதிமுக உள்ளது.
தாய்மார்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு பள்ளி மாணவர்களுக்கு காலில் அணியும் காலணி முதல் மடிக்கணிணி வரை கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான் திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த 525 வாக்குதுறுதிகளில் முழுமையாக நிறைவேற்றவில்லை வாக்களித்த மக்களுக்கு அல்வா தான் கொடுத்திருக்கிறார். அதுவும் இருட்டு கடை அல்வாவை கொடுத்திருப்பதாகவும், மிக்சி கிரைண்டர் போன்றவைகள் குடும்ப அட்டை தாரர்களுக்கு தகுதி பார்த்து தரவில்லை ஆனால் திமுக அரசு தகுதி பார்த்து மகளிர் உரிமை தொகை வழங்குவதாக என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: Vande Metro Train: விழுப்புரம் To சென்னை... மின்னல் வேகத்தில் போகலாம்.. வேலைக்கு செல்வோருக்கு வரப்பிரசாதம்..!
திமுக ஆட்சியில் மாணவிகளை பள்ளி அனுப்ப முடியவில்லை தினமும் கற்பழிப்பு பாலியம் சம்பவம் தான் நிகழ்கிறது திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தன்னை அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என ஸ்டாலின் கூறுகிறார். அப்படி கூறுகிறார்கள் என்றால் மக்கள் தான் அதனை தெரிவிக்க வேண்டும் தினந்தோறும் நாடகம் நடத்தும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். சாராயம் விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை செய்யபட்டுள்ளார். எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. தமிழகத்தில் தங்கு தடையயின்றி கஞ்சா போதை பொருட்கள் கிடைக்கின்றன.
காவல் துறையில் உள்ளவர்களுக்கே பாதுகாப்பு இல்லை டிஜிபி சங்கர்ஜிவால் வந்த பிறகு தான் தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறினார். திமுக ஆட்சியில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை திமுக அரசு அகம்பாவம், ஆணவத்தில் உள்ளது. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசாகவும் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மக்களை பற்றி சிந்திக்காத அரசாக திமுக உள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு கொடுக்க பணமில்லை ஆனால் கலைஞர் கருனாநிதி பெயரில் கலையரங்கம் கட்டுவதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது என சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.