புதுசு புதுசா... யார் யாரோ வருவார்கள்; விஜயை மறைமுகமாக தாக்கிய சி.வி. சண்முகம்

தேர்தல் நேரத்தில் புதுசா நான்கு பேர் வருவார்கள், புதுசு புதுசா அறிக்கை கொடுப்பார்கள்.. ஆனால் தேர்தல் முடிந்து காணாமல் போய்விடுவார்கள்

Continues below advertisement

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டிவனம் – மரக்காணம் சாலையில் உள்ள மன்னார் சாமி கோயில் பகுதியில் நடைபெற்றது.

Continues below advertisement

நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்.,

ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, பத்திரப்பதிவு கட்டணம், சாலை வரி, வாகன வரி, பால் விலை, காய்கறி விலை என அனைத்து விலைகளும் உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். அதைப்பற்றி துளியும் சிந்தனையில்லாத அரசு இன்றைக்கு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது, வேஷம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இல்லாத பிரச்சனையை இருப்பது போல் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் அரசு மக்களை திசை திருப்பபார்க்கிறது. இன்றைக்கு திமுக ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே திமுக அரசு மக்களை பற்றி துளியும் சிந்திக்காத அரசு மக்களை ஏமாற்றம் இந்த அரசு அகற்றப்பட வேண்டிய அரசு, தூக்கி எறியப்பட வேண்டிய அரசு.  ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். வேங்கை வயல் பிரச்சனயில் புகார் கொடுத்தவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திமுக எதுவும் செய்யாது.

தொடர்ந்து பேசிய சிவி சண்முகம்., புதுசு புதுசாக யார் யாரோ வருவார்கள்... அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று பேசுவார்கள் ஆனால் ஏதும் செய்ய மாட்டார்கள் தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள். தேர்தல் நேரத்தில் புதுசா நான்கு பேர் வருவார்கள், புதுசு புதுசா அறிக்கை கொடுப்பார்கள்.. ஆனால் தேர்தல் முடிந்து காணாமல் போய்விடுவார்கள். அதிமுக எல்லாரையும் பார்த்து இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான் எல்லோரையும் பார்த்து இருக்கிறது என மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்து பேசினார்.

இதற்கான காலம் விரைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலமே உள்ளது. தேர்தல் நேரத்தில் புதியவர்கள் வருவார்கள் போவார்கள் மேலும் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்து மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடி தலைமையில் அமைக்க வேண்டும் என பேசினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola