தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயர தொடங்கின குறிப்பாக தக்காளி 100 ரூபாயை கடந்து விற்பனையானது. கடலூரிலும் கடந்த சில வாரங்களாக தொடர் மழை மற்றும் கடந்த 19 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது மேலும் பெரும்பாலன விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாக கடந்த சில நாட்காகவே காய்கறிகளின் விலை அதிகமாக காணப்பட்டது தக்காளி சுமார் 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனை ஆனது.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காராமணிக்குப்பம் பகுதியில் திங்கட்கிழமை தோறும் சந்தை நடைபெறுவது வழக்கம், இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவர் இணன்னிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வியாபாரிகள் வர இயலாத காரணத்தினால் சந்தை சரியாக நடைபெறவில்லை, பின்னர் சுமார் 45 நாட்களுக்கு பிறகு கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத காரணத்தினால் இன்று மீண்டும் சந்தை கூடியது. சந்தையில் கருவாடு, கோழிகள், காய் கறிகள் அதிகமாக விற்பனை ஆவது வழக்கம்.
ஆனால் தற்பொழுதும் இதர மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக காய்கறிகளின் வரத்து இன்றி விலை குறையாது காணப்படும் காரணத்தால் இன்று சந்தையில் தக்காளி ஒரு கிலோ 80 முதல் 100 வரையும், வெங்காயம் 40 முதல் 60 வரையும், உருளை கிழங்கு 40 முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகிறது.கடலூர் மாவட்டத்தில் மழை இன்றி காணப்படும் சூழலிலும் காய்கரிகளின் வரத்து குறைந்தே காணப்படுவதால் விலை குறையாத நிலை உள்ளது இதன் காரணமாக சந்தைக்கு மக்கள் கூட்டம் வந்தாலும் காய்கறி வாங்க தயக்கம் காட்டுகின்றனர், மேலும் கருவாடு விளையும் குறையாமல் உள்ளதால் மக்கள் விரும்பி வாங்க மறுக்கின்றனர் ஆனால் மழை இல்லாத காரணத்தினால் தாங்கள் கொண்டு வந்த கருவாடுகள் விற்பனை ஆகி லாபம் கிடைக்காமல் போனாலும் எங்களால் மீண்டும் பத்திரமாக எடுத்து செல்ல முடியும். இருப்பினும் வெகு நாட்களுக்கு பின் முழுமையாக சந்தை கூடினாலும் மக்கள் அதிகம் வாங்க முன் வராதது நஷ்டம் ஆகும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.