கடலூர் மாவட்டம் ,நெய்வேலி பழையபாப்பான் பகுதி பட்டியலின வகுப்பைச் சார்ந்த கலைமணி -பானுமதி என்பவரின் மகன் கர்ணன். அதே பகுதியில் அடுத்த தெருவில் வசிக்கும் வேறு வகுப்பை சேர்ந்த அண்ணாதுரை -தமிழ்ச்செல்வி என்பவரின் மகள் கௌசிகா இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூர் மைசூர் பகுதியில் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இதுகுறித்து நெய்வேலி சேப்ளா நத்தம் காவல் நிலையத்தில் கௌசிகா வின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பெங்களூர் சென்று திருமணம் செய்துகொண்ட கர்ணன் - கௌசிகா இருவரையும் அழைத்து வந்துள்ளனர். காவல் நிலையத்தில் கௌசிகா கர்ணனுடன் வாழ சம்மதித்ததால். காவல் துறையினர் கௌசிகா வை கர்ணனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்பு, இருவரும் விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கௌசிகா கர்ப்பமான நிலையில் கௌசிகா விற்கு வளைகாப்பு விழா நடத்துவதற்கு பத்திரிகை அடித்து கர்ணன் தன்னுடைய சொந்த பந்த உறவினர்களுக்கு வைத்துள்ளார். இதனையடுத்து, நேற்று விருத்தாசலம் பங்களா தெருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி பெண்ணான கெளசிகாவிற்கு வலையல்காப்பு மணமகன் வீட்டார் உறவினர்களுடன் மண்டபத்தில் நடந்து முடிந்தது. அப்போது, 4 மணியளவில் மண்டபத்திற்கு வந்த கௌவுசிகாவின் அண்ணன் வினோத் மதுபோதையில் மண்டபத்தின் மேல் பகுதிக்கு வந்து வளையணி நிகழ்ச்சி முடிந்து அறையில் அமர்ந்து கொண்டிருந்த தங்கை கௌசிகா மற்றும் கர்ணன் இருவரிடம் சென்ற வினோத். பத்திரிக்கையில் என் அப்பா -அம்மா பெயரை ஏன் போட்ட என்று சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கை கெளசிகா மற்றும் அவரது கணவர் கர்ணன் இருவரையும் வினோத் அடித்துக் கொண்டு இருந்ததாகவும், இச்செய்தியை அறிந்து அங்கு இருந்த கர்ணனின் உறவினர்கள் அறைக்குச் சென்று வினோத்தை தடுத்துள்ளனர். அப்போது வினோத் கர்ணனின் உறவினர் மகனான சிலம்பரசனை பதுக்கி வைத்திருந்த பேனா கத்தியால் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.
பின்பு, அங்கு இருந்த உறவினர்கள் வினோத்தை மண்டபத்திற்குள் பிடித்து வைத்து விட்டு விருத்தாசலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் வினோத்தை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட சிலம்பரசன் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.