கடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள 45 பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் மூலம் பெறப்படும் குப்பைகள் கொட்ட முறையான இடம் இல்லாத காரணத்தினால் குப்பைகளை தொடர்ந்து கெடிலம் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். இது தற்பொழுது கடலூர் மாநகராட்சி ஆன பிறகும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் என பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை அல்ல வாகனம் இல்லாத காரணத்தினால் மிதிவண்டியில் சென்று பல பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பை அள்ளும் வாகனம் இல்லாத காரணத்தினால் மிதிவண்டியில் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை சாக்குமூட்டையில் கட்டிக்கொண்டு மிதிவண்டியில் வைத்துக்கொண்டு சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வாகனம் இல்லையா என கேள்வி எழுப்பிய போது வாகனம் ஏதும் தங்களுக்கு கொடுக்கப்படவில்லை எனவும், அதனால் தான் மிதிவண்டியில் வந்து எடுத்து செல்கிறோம் மன வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் இருவதுக்கும் மேற்பட்ட சிறிய குப்பை அள்ளும் வண்டிகள் எந்த பயனும் இன்றி அதே இடத்தில் வீணாகி வருகின்றது, இவ்வாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு தர வேண்டிய உபகரணங்களை முறையாக அவர்களுக்கு குடுக்காமல் ஒரே இடத்தில் இருந்து இவ்வாறு வீணாக போவது பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காலை கெடிலம் நதி கரையோரம் கொட்டப்பட்ட குப்பையில் மர்ம நபர்கள் திடீரென தீ வைத்து கொளுத்தியதால், கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கம்மியம்பேட்டை செல்லும் சாலையில் முழுமையாக புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் இதனால் புகையை கடந்து வந்த இரண்டு பேர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
பின்னர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்த அவர்கள் தீ அணைப்பு வாகனம் வராத காரணத்தால் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீரை வைத்து தீயை அனைத்தனர், இவ்வாறு ஏற்கனவே குப்பை கொட்ட இடம் இல்லாமல் கெடிலம் ஆற்றங்கரையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டி வரும் நிலையில், மேலும் இது போன்று குப்பை அல்லும் வாகனம் இல்லாமல் மிதிவண்டியில் குப்பைகளை எடுத்து செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது