கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19ஆம் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடி கடலூர் வங்க கடலில் சங்கமித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது மேலும் சுமார் 5500 ஹெக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளது.இதில் கடலூர், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்புகள், விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சில கிராமங்கள் தீவுகளாகவே மாறியது. அதன் பின் தற்பொழுது தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது, தற்பொழுது தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் செல்கிறது.



 

கடலூர் மாவட்டதில் பல்வேறு பகுதிகளில் கரை ஓரம் உள்ள கிராமங்களில் பெரும்பாலன பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பண்ருட்டியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் பல குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து தேங்கி உள்ளது மேலும் பண்ருட்டி பகுதியை சுற்றி உள்ள மேல்குமாரமங்கலம், புலவனாரு, கோழிப்பாக்கம், மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களை மழை மற்றும் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக பண்ருட்டியில் உள்ள ஆர்எஸ் மணி நகரில் வசிக்கும் சந்திரன் என்பவருடைய இரண்டரை வயது குழந்தை சுதேசமித்திரன் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தபோது வீட்டு வாசலில் தேங்கியிருந்த மழைத் நீரில் எதிர்பாராமல் விழுந்ததாக கூறப்படுகிறது, இதைப் பார்த்த சந்திரன் மற்றும் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

 



 


பின்னர் சிறுவனை பரிசோதித்த மருத்துவர் குழந்தை சுதேசமித்திரன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். இதை கேட்ட பெற்றோர்கள் கதறி அழுதனர். மேலும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்ற எந்த ஒருநடவடிக்கை எடுக்காமல் இருந்ததே தற்போது குழந்தை உயிரிழக்க காரணம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.வீட்டின் வாசலில் தேங்கி இருந்த மழை நேரில் மூழ்கி இரண்டரை வயது சிறு பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.