விழுப்புரம் : விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை சிபிசிஐடி போலீசார் இன்று முதல் 26 ஆம் தேதி மாலை 5 வரை மூன்று நாட்கள் காவலில் விசாரனை செய்ய விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். 

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இவ்வழக்கில் முக்கியமானவர்கள் அமரன், பர்க்கத்துல்லா, மன்னாங்கட்டி ஆறுமுகம், குனசீலன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் மதன் என்ற குற்றவாளி மட்டும் தலைமறைவாக உள்ள நிலையில் இவ்வழக்கில் 12 பேர்  போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர்.

 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரனை செய்ய நேற்றைய தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதுத்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரனை விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது. இவழக்கினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரையும் சிபி சி ஐ டி போலீசார் 26 ஆம் தேதி 5 மணி வரை விசாரனை செய்யலாம் என மூன்று நாட்கள் காவலில் விசாரனை செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 11 பேரிடம் சிபிசி ஐ டி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.