சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டெய்னர் கப்பல் வந்து சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. சென்னை துறைமுகத்தில் இடபற்றாக்குறை இருப்பதால் அங்கு சரக்குகளை ஏற்றி இறக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால 100 கண்டெய்னர்களை மட்டும் புதுவை துறைமுகத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து தெற்கு பகுதிக்கு டெலிவரி செய்ய 2 துறைமுகம் இடையே ஒப்பந்தம் கையழுத்தானது. 


இதற்காக ஒரு தனியார் நிறுவனம் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 106 கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் வகையில் சிறிய ரக கப்பலை புதுவைக்கு கடந்த 11-ந் தேதி கொண்டு வந்தது. கடந்த 15 நாட்களாக துறைமுக வளாகத்தில் அந்த கண்டெய்னர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த கப்பல் சென்னைக்கு இன்று காலை கண்டெய்னர்களை ஏற்றி வருவதற்காக புறப்பட்டது, ஆனால் துறைமுகத்தை மணல் மூடியதால் அந்த கப்பலால் கடலுக்குள் செல்லடியவில்லை.


இதனையடுத்து 2 படகுகளை வைத்து அந்த கப்பல் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டது. இதனால் கண்டெய்னர்களை ஏற்றி வர செல்லும் கப்பல் சுமார் 1 1/2 மணி நேரம் துறைமுகத்தில் இருந்து வெளியேற தாமதம் ஏற்பட்டது, சென்னையில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி வரும் அந்த கப்பல், கண்டெய்னர்களை ஏற்றிய வந்த பிறகும், துறைமுகத்தில் நுழைய கப்பலுக்கு சிரமம் ஏற்படும் என தெரிகிறது. இதனால் நடுக்கடலில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு படகுகள் மூலம் கண்டெய்னர்களை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண