கடலூர் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பு தீட்சிதர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் தர்ஷன் என்ற தீட்சிதர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபையின் மீது அழைத்துச் சென்றபோது மற்ற தீட்சிதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சாதி தீண்டாமையை தீட்சிதர்கள் கடைப்பிடித்ததாகவும், மேலும் இங்கு இருக்கு வேறொரு தீட்சதர் உதவியுடன் கனக சபை மீது ஏற முற்பட்டபோது, என்னை சாதி பெயரை குறிப்பிட்டு திட்டினர். தவறாக பேசினர் என்று புகாரில் ஜெயஷீலா குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக சில பிரச்னைகள் நீடித்து கொண்டு இருப்பதால் அதனையொட்டி இந்த விசாரணை செய்யப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெய ஷீலா பொய் கூறுவதாகவும், தீட்சிதர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார். கடந்த 7 மாதங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நகர் காவல் துறையினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு எனது வீட்டிற்கு வந்து இந்த வழக்கில் பொய் உரைத்துள்ளதாகவும், தவறாக புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். அதற்கு என்னை கையெழுத்திட காவல் துறையினர் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திட மறுத்துவிட்டேன். இந்த சம்பவம் அனைத்தும் உண்மை, இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் உள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக நான் தொடர்ந்து போராடினேன் மீண்டும் மீண்டும் கையொழுத்து போட போலீசார் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திடவில்லை என புகார் அளித்த ஜெயஷீலா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதனையும் சிறிது நேரம் கழித்து விலக்கிவிட்டனர் என்கிறார் ஜெய ஷீலா.
மேலும், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் தலையிட்டு இதில் உண்மை தன்மையை வெளிகொண்டு வர உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்கும் படி சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் ஜூலை 29ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் முறையான நடைமுறைகள் சிலவற்றை பின்பற்றாமல் அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக தவறாக கையாண்டுள்ளார். இந்த விவகாரத்தில் என எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.மேலும் புதிதாக விசாரணை அதிகாரியை நியமித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
கனக சபை மேலே ஏறி சாமி தரிசனம் செய்த விவகாரம் தொடர்பாக பெண்பக்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது தவறான புகார் என்று கூறி பெண்ணின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு விசாரணை அதிகாரியை மாற்றிய சம்பவங்கள் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.