விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரத்தில் 20-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரம்யா. இவரின் கணவரான மரூர் ராஜா என்பவர் மீது, சாராய கடத்தல் உள்ளிட்ட சில வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. இவரின் உறவினரான தொகைப்பாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு பெற்றோர்கள் இல்லாததால், மரூர் ராஜவுடனே இருந்து வந்துள்ளார். சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட சந்தோஷ் குமார், தனியாகவே கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.


இதனால் மரூர் ராஜா - சந்தோஷ் குமார் குடும்பத்தாரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி 500 லிட்டர் சாராயம் மற்றும் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக நவீன் குமார் எனும் இளைஞருடன் சந்தோஷ் குமாரையும் மயிலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு மறுநாள் மரூர் ராஜா தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கஞ்சா, சாராயத்தை வைத்து தனது கணவரை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக காவல்துறையிடம் சிக்க வைத்துள்ளார் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் சந்தோஷ் குமாரின் மனைவி ராணி.


சந்தோஷ் குமாரின் ராணி, மரூர் ராஜா மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த தகவல் மரூர் ராஜாவிற்கு கிடைத்துள்ளது, இந்தநிலையில்  நாரேரிகுப்பம் பகுதியில் இருந்த ராணி வீட்டிற்கு கவுன்சிலரான தனது மனைவி ரம்யாவுடன் நேற்று இரவு சென்றுள்ளார்கள். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ராணியையும் தாக்கியதாக வீடியோ காட்சிகள், வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிப்பிற்கு உள்ளான ராணி சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அவரை சிகிச்சை பெற உள்ளே விடாமல் மரூர் ராஜாவின் ஆள்கள் மிரட்டியுள்ளனர் .


இதனைத் தொடர்ந்து மயிலம் காவல்நிலையத்திற்கு சென்ற ராணி, இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறை ஆய்வாளர், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளரான இவர் மீது கொலை முயற்சி, கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவர்.




“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை


பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர