விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் இரண்டு இளைஞர்களை, மூன்று திருநங்கைகள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் உலா வரும் திருநங்கைகள் தவறான செயல்களில் ஈடுபட்டு பயணிகளுக்கு தொந்தரவு அளித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக திருச்சி, கோயம்புத்தூர் மதுரை போன்ற இடங்களிலிருந்து வரும் பயணிகளிடம் திருநங்கைகள் அத்துமீறுவதும் சிலர் திருநங்கைகளிடம் தகாத உறவுக்காக செல்லது போன்றவைகள் வாடிக்கையாகி இருந்து வருகின்றனர்.
திருநங்கைகளிடம் தகாத உறவுக்காக செல்பவர்களிடம் பணம் மற்றும் செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் சிலர் அவமானப்பட்டு போலீசிலில் புகார் தெரிவிக்காமல் செல்வதால், இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் திருநங்கைகள் தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உலா வந்து பேருந்து பயணிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும், இரண்டு தினங்கள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தன் வேலையை மீண்டும் மீண்டும் காட்டுகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கடை ஒன்றில் இருக்கும் சிசிடிவி கட்சியில் இரண்டு இளைஞர்கள் நடந்து சென்ற திருநங்கையை அழைத்து பேரம் பேசும் போது வாய் தகராறு ஏற்பட்டு இரண்டு இளைஞர்களையும் பிடித்து மூன்று திருநங்கைகள் ஒன்றிணைந்து அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருநங்கைகள் சண்டையிடும்போது கடையில் இருந்த கட்டை எடுத்து அடிக்க செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.