புதுச்சேரி: புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்ச -கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஏசி வசதியில்லாத பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.13-ல் இருந்து ரூ.17ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி அறிவிப்பை போக்குவரத்து கூடுதல் செயலர் வெளியிட்டார்.
புதுச்சேரியில் புதிய பேருந்துக் கட்டண நிர்ணயம் - அரசு ஆணை வெளியீடு
புதுச்சேரியில் புதிய பேருந்து கட்டணங்கள் நிர்ணயம் செய்து புதுச்சேரி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்து துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் இயக்கப்படும் நிலை நிறுத்தப் பேருந்து கட்டணமானது புதுச்சேரி அரசின் ஆணைப்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது .
புதுச்சேரி பேருந்து உரிமையாளர்கள் வாகன எரிபொருள், உதிரிப் பாகங்கள், டயர், வாகனக் காப்பீட்டுக் கட்டணம், பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழிலாளர்கனுக்கான ஊதியம் போன்றவை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு கடந்த 2012ம் ஆண்டில் நிர்ணயித்த கட்டணத்தை உயர்த்துமாறு புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை இருத்திருந்தனர் .
புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை, டெல்லி பல்நோக்கு போக்குவரத்து குழுமத்தின் (DIMTS) புதுச்சேரிக்கான வழிகாட்டு நெறியான விரிவான போக்குவரத்து திட்டத்தில் (CMP) குறிப்பிட்ருள்ளபடி நிலை நிறுத்தப் பேருந்துகளுக்கான கட்டணத்தை மறுநிர்ணயம் செய்துள்ளது . அதில் பேருந்து இயக்கத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் காரணிகளையும் கணக்கில் கொண்டி பேருந்து கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது .
புதுச்சேரி அரசாணைப்படி விரைவு/சாதாரண/நகர சேவை பேருந்துகளின் புதிய கட்டண விவரம் பின்வருமாறு:
(1) நகர சேவை பேருந்து:
புதுச்சேரி யூனியன் பிரதேசதத்திற்குள் இயக்கப்படும் நகர சேவை பேருந்துகளுக்கு முதல் நிலைக்கு ரூ. 5/-ற்கு (ரூபாய் ஐந்து) மிகாமல் கட்டண்மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஒவ்வொரு நிலைக்கும் ரூ. 2/-ற்கு மிகாமல் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . ஒரு நிலை என்பது 3 கிலோமீட்டர் தூரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
(2) விரைவுப் பேருந்து அல்லாத நிலை நிறுத்த பேருந்துகள்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் இயக்கப்படும் நிலை நிறுத்தப் பேருந்துகனுக்கு முதல் 6 கி.மீ. வரையில் உள்ள தூரத்திற்கு ரூ. 8ற்கு (ரூபாய் எட்டு) மிகாமல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதன் பின்னர் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.0.75 (75 காசு) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(3) விரைவுப் பேருந்துகள்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. வரையில் உள்ள தூரத்திற்கு ரூ 25/-ற்கு (ரூபாய் இருபத்தைந்து) மிகாமல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதன் பின்னர் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.0.90 (90 காசு) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
(4) குளிர்சாதன வசதி மற்றும் இரவு சேவை பேருந்துகணுக்கு புதிய கட்டணம்:
புதுச்சேரி ஒரு முக்கியமான சுற்றுலா மையம்; அனைத்து தரப்பினரும் பொது போக்குவரத்தினை உபயோகபடுத்துவதை ஊக்குவிக்ககும் முகமாக, கீழ்கண்ட போக்குவரத்து கட்டண விகிதங்கள் புதிதாக அறிறுகப்படுத்தப்பட்டுள்ளன .
- குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் ஒவ்வொரு வகைக்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இது சாதாரணப் பேருந்து கட்டணத்தைப் போல் இரு மடங்காகும்.
- நகரப் பகுதிகளில் இரவு நேர பேருந்துச் சேவைக்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரவு 11.00 மணி முதல் அதிகாலை 00 மணி வரை நகரப் பகுதியில் இயக்கப்நும் இரவுச் சேவை நகரப் பேருந்துகளுக்கு, நகரப் பேருந்து கட்டணத்தைப் போல் இரு மடங்கு கட்டணமாகும் .
மேற்படி கட்டணத்துடன் அவ்வப்போது மாற்றத்திற்குட்பட்டு அரசு நிர்ணயிக்கும் 681 கட்டணமும் அதற்குரிய பேருந்துகளில் வசூலிக்கப்படும் . புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பரப்பில் அல்லாது மற்ற மாநில சாலைகளில் பேருந்துகள் இயக்கப்படும் பொழுது, அத்தகைய தூரத்திற்கு அந்த மாநிலம் நிர்ணயம் செய்துள்ள பேருந்து கட்டணமே வசூல் செய்தல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.