புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா காமராஜர் மணிபண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து நல்லாசிரியர் விருதுக்கு அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தனர்.


ஒரே நாடு ஒரே தேர்தல்; முதல்வர் ரங்கசாமி வரவேற்பு


புதுச்சேரியில் ஆசிரியர் தின விழா முடிவில்  முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இந்தியாவை பாரத தேசம் என்று அழைப்பதை வரவேற்பதாகவும் பாரத தேசம் பழமையான சொல் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கத்தக்கது. அதில் உடன்பாடு உள்ளது என்றார். இதேபோல ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு உள்ளது. வரவேற்கத்தக்கது என்று கூறினார்.


ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழ் 


உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ்தான் தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர்  என்பதற்கு பதில்  பாரத் குடியரசுதலைவர் என  அச்சிடப்பட்டுள்ளது. இது தான் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பதாக கூறியுள்ளார்.