தொடர் சர்ச்சையில் சிக்கும் கலிவரதன்:


விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் பாஜகவிலுள்ள நிர்வாகிகளுக்கு எதுவுமே தெரியாது என தகாத வார்த்தைகளால் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  


விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக விஏடி கலிவரதன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது கட்சியிலுள்ள பெண் நிர்வாகிளிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தினார். இதனால் மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் நீக்கப்பட்டு அதன் பிறகு விழுப்புரம் மாவட்ட பாஜகவை வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிருந்து தெற்கு மாவட்ட பாஜக தலைவராக விஏடி கலிவரதனும் வடக்கு மாவட்ட தலைவராக ஏடி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.


இந்நிலையில், மாவட்ட ஐடி விங்கிற்கு பொறுப்பு நிர்வாகிகள் நியமனம் செய்வதற்காக பாஜக மாவட்ட ஐடி பிரிவு தலைவர் பிரபாகரன் என்பவர் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் விகேடி கலிவரதனுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது பாஜகவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது எனவும் மாநில பொறுப்பு வழங்கப்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்று கூட அவர்களுக்கு தெரியாது என்று தகாத வார்த்தைகளால் இழிவாக பேசும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கபட்ட கலிவரதனை கட்சி பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென அக்கட்சி உறுப்பினர் தெரிவித்து வருகின்றனர்.


 


அண்ணாமலை என்ன கடவுளா ?


அண்ணாமலை என்ன கடவுளா என பா.ஜ.க  மாவட்ட தலைவர் பேசியது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கலிவரதன். இவரை  அக்கட்சியை சேர்ந்த மாவட்ட துணை  தலைவரின் கணவர், மொபைல் போனில் கடந்த வருடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 20 பெண்கள் மற்றும் பா.ம.கவினர் 50-க்கும் மேற்பட்டோரை, திருமணவிழாவிற்கு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க,வில் இணைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கலிவரதன், “அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது” என்றார்.


அதற்கு அந்த நபர் பசங்க ஆசைப்படுகிறார்கள் என துணைத் தலைவரின் கணவர் தெரிவித்தார். பதில் அளித்த கலிவரதன், அவங்க கேட்பதற்காக நாம் செய்ய முடியாது. பதவிக்கு மரியாதை கொடுங்கள். நான் வந்தால்தான் கட்சியில் சேரணும். “அண்ணாமலை என்ன கடவுளா”. உனக்கு நான் கடவுளா, அவர் கடவுளா. அப்பறம் ஏன் அண்ணாமலையை கூப்பிட்டு வா, திருவண்ணாமலையை கூப்பிட்டுவானு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க.




என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க. என்னைவிட பெரிய ஆளு யாரும் கிடையாது என்றார். இருவரும் பேசிய ஆடியோ வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரை கடவுளா என அக்கட்சியின் மாவட்ட தலைவர் பேசியிருப்பது அரசியல் கட்சி வட்டாரத்தில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கலிவரதனை மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் எதையும் போனில் பேச விரும்பவில்லை எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.


பாலியல் சர்ச்சை :



விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கலிவரதன், பாஜவில் பொறுப்பு வாங்கித் தருகிறேன் என்று ரூ.5 லட்சம் வாங்கிக் கொண்டு ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டி வீடியோ எடுத்ததாக மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்திருந்தார். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆனால், பாஜக தலைமை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாரளித்த பெண்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், பல பெண்கள் புகார் கொடுக்க தயங்கினார்கள். ஒன்றிரண்டு பெண்கள் மட்டுமே தைரியமாக போலீசில் புகார் கொடுத்தார்கள்.


கட்சி நிர்வாகிகளை சாதி பெயரைச் சொல்லி திட்டிய சர்ச்சை :


விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் பட்டியலின நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக கவுன்சிலர்கள் சீட்டுகளை கேட்டுள்ளனர். அப்பொழுது விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் சாதிப் பெயரைச் சொல்லி உனக்கு எல்லாம் எதற்கு சீட் என்றும்,  பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தியதோடு இல்லாமல் உங்களை தீர்த்துக் கட்டி விடுவேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைக் கண்டித்து பட்டியலின நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட தலைவர் அறிவழகன் கண்டித்து விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.


மாநிலத்தலைவர் அண்ணாமலை பற்றி அவதூறு சர்ச்சை




பாஜக மாவட்ட துணைத் தலைவரின் கணவர், பாமகவினர் 50க்கும் மேற்பட்டோரை திருமண விழாவிற்கு வரும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போனில் சில தினங்களுக்கு முன்பாக தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு பதிலளித்த கலிவரதன், அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது' என்றார். அண்ணாமலை என்ன கடவுளா. உனக்கு நான் கடவுளா, அவர் கடவுளா? அப்பறம் ஏன் அண்ணாமலையை கூப்பிட்டு வா, திருவண்ணாமலையை கூப்பிட்டு வான்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேர சொல்லுங்க. என்னை விட பெரிய ஆளு யாரும் கிடையாது' என்றார். இருவரும் பேசிய ஆடியோ 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நடவடிக்கை இல்லை ? 


இதுபோன்ற பல்வேறு சர்ச்சையிலும் வழக்குகளில் சிக்கி வரும் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது தற்போது வரை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.