விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் செல்போன்களை திருடிய சென்னைய சார்ந்த இளைஞரை கைது செய்து, 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் செல்போன்கள் திருடப்படுவதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையிலிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை சோதனையிட்டனர். அதில் இளைஞர் ஒருவர் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மருத்துவமனை வளாகத்தில் உறங்குபவர்களிடம் இருந்து செல்போன்களை திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் ஐ எம் இ நம்பரை கொண்டு டிரேஸ் செய்ததில் சென்னை திருவல்லிக்கேனியில் இருப்பது தெரியவரவே, அந்த இளைஞரை திருவல்லிக்கேணியில் போலீசார் கையும்களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்டு திருடனிடம் போலீசார் விசாரனை செய்ததில் திருவல்லிக்கேணி பழனியம்மன் கோவில் தெருவை சார்ந்த மேகநாதன் என்பதும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் பத்து செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து பத்து செல்போன்கள் போலீசார் பறிமுதல் செய்து மேகநாதனை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்