விழுப்புரம்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா விழுப்புரம் ரயில் நிலையத்தில் எல்இடி டிவி மூலம் நேரலை நிகழ்வு ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு:


நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம். அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோவில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது. 


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, அதாவது ஜனவரி 22-ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளன. 


கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது. இவர்களை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்துள்ளனர்.


அயோத்தியில் ராமர் குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய கூடாது என காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெறுகிறது. இதனைக் காண மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட எல்இடி திரையில் பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. காவல்துறை அனுமதி இல்லாததால், எல்இடி திரையை காவல்துறையினர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து எல்இடி திரையை அகன்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் எல்இடி டிவி மூலம் அய்யோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை நிகழ்வு ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.