விழுப்புரம் ரயில் நிலையத்தில் குளியலிட்ட வட மாநிலத்தவர்கள் வீடியோ வைரல்ஆனா நிலையில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது. ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு அரவிந்தோ சூப்பர் ஃபாஸ்ட் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை ஹவுராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. ஹவுராவிலிருந்து காரக்பூர், புவனேஸ்வர், விஜயவாடா, ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, வேலூர், விழுப்புரம் வழியாக இந்த ரயில், செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறது. ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் இந்த ரயிலில், வட மாநிலத்தவர்கள் குடும்பம் குடும்பமாக பயணிக்கின்றனர். திருப்பதிக்கு அடுத்தபடியாக காட்பாடி, வேலூர் போன்ற நிறுத்தங்களில் குறைந்த எண்ணிக்கையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏறி பயணிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஹவுராவில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணிக்கு விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, இந்த ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தவர்கள் இந்த ரயில் நிலையத்தில் இறங்கினர். இந்த ரயிலை விட்டு இறங்கிய வெளி மாநிலத்தவர்கள், தமது உடைமைகளை எடுத்துக்கொண்டு, ரயில் நிலையத்தை விட்டு வெளியேறாமல், ரயில் நிலையத்தை வீடாகப் பயன்படுத்தினர்.
அதாவது, ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்கு குடிநீர் ஏற்றும் பெரிய குழாய்களை திறந்து, பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் ஏதோ குற்றால அருவியில் குளிப்பதைப்போல, அரை நிர்வாணக் கோலத்தில் வட மாநிலத்தவர்கள் ஆனந்த குளியலிட்டு, அட்டகாசம் செய்தனர். இவர்களது இத்தகைய செயல்பாடு, அங்கிருந்த மற்ற ரயில் பயணிகள் திகைத்து போயினர். இந்தக் காட்சியை காணும்போது இது, ரயில் நிலையமா? அல்லது குற்றால அருவியா தெரியவில்லை. அந்த அளவுக்கு ரயில் நிலைய நடைபாதையில் வட மாநிலத்தவர்கள் அட்டகாசம் செய்தனர். சத்தம் போட்டாலும் கேட்காத நிலையில், ரயில் நிலைய அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் விட்டு விட்டனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்