பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது . இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின் போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப்பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்ட லங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்றும் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்றும் வெளியானது. அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட் டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் ( தென் சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசி வடக்கு) ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16-ந் தேதி முதல் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். அதன்படி இன்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையே கட்சிக்கும் அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், இந்த சந்திப்பு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையே இன்று சமாதானம் ஏற்பட்டு மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று கட்சியினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் தற்போது சைதை துரைசாமி மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி வந்துள்ளனர்.
பிரச்சனைக்கு தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் காரணமா?
அன்பழகன் கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகி
இந்நிலையில் பனையூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி கட்சி நிர்வாகிகளுடன் பேசியபோது கட்சியில் நிர்வாகிகள் பாமகவினரிடையே நிறைய குரூப்புகள் உள்ளது இதற்கு எல்லாம் காரணம் தலைமை நிலையசெயலாளராக உள்ள அன்பழகன் தான் காரணம் கட்சியில் 15 வருடமாக இல்லாமல் ஓடிவிட்டார். மீண்டும் கட்சிக்கு வந்த அவர் மருத்துவர் ராமதாசின் காலை பிடித்து பொறுப்புகளை வாங்கி கொண்டு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு வழங்க ரூ.5 லட்சம் என பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அன்பழகன் கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகியாக இருந்து கொண்டு கட்சியையும் சமுதாயத்தினை விற்று கொண்டிருப்பதாகவும் அவருடன் மற்றொருவர் இருக்கிறார், எல்லாத்தையும் பொறுத்து கொண்டு அமைதியாக தான் இருப்பதாகவும் என் மனதில் நிறைய உள்ளது நிர்வாகிகள் தைரியமாக இருங்கள் என அன்புமணி ராமதாஸ் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.