விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி நெருக்கடியான சூழலில் உள்ளதால் மன வேதனையில் உள்ளதாக அக்கட்சியின் கெளர தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக்கி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தன்னை எதற்காக பதவி இறக்கம் செய்தார் என்பது தெரியவில்லை மன உலைச்சலில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தலைமை அன்புமணிக்கு இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டினை ராமதாஸ் முன்வைத்தார். இந்நிலையில் ராமதாசையும், அன்புமணி ராமதாசையும் சமாதானபடுத்தும் முயற்சியில் ஜி கே மணி தொடர்ந்து சென்னைக்கும் தைலாபுரத்திற்கும் மாறி மாறி இருவரையும் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் தைலாபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்மின் திருப்பூர் மாவட்டம் மாநில துணைத்தலைவர் மன்சூர்

கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் திருவள்ளுவர் மாவட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருவள்ளுவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி ரவி ராஜ் தொண்டர்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்து சந்தித்தனர். அதே போன்று கெளர தலைவர் ஜிகே மணி தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்தித்து பேசினார்.

மருத்துவர் ராமதாசை சந்திப்பதற்கு முன்பாக பேட்டியளித்த ஜி கே மணி, இப்ப நான் என்ன சொல்ல வேண்டுமா இப்ப சொன்னால் சரியாக இருக்காது, நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள் எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலில் இருக்கின்றேன்.பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பலமான கட்சி, தனித்தன்மையோடு இருக்கக்கூடிய கட்சி, கொள்கையுடனும் லட்சத்துடன் இருக்கக்கூடிய கட்சி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றது,ரொம்ப வேதனை படுகிறோம், கஷ்டப்படுகிறோம் நான் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள். நீங்க சொல்லி ஆக வேண்டும் என்று கேட்பதினால் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது, இல்லை என்றால் நான் ஓடி இருப்பேன், ஓடினாலும் சொல்லாத ஓடினான் என்று அது ஒரு செய்தியாக வருகிறது, மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது, இந்த நெருக்கடியை பார்த்தால் ரொம்ப கஷ்டமாகவும் வேதனையாகவும் உள்ளது இது மறுபடியும் சீராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம் என கூறினார். மேலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என நினைக்கின்றோம், குடும்ப பாசத்தோடு இருக்கக்கூடிய கட்சி,வலிமையான கட்சியால் பலமான கட்சியா மீண்டும் வரணும், பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி. தேர்தல் வருகின்ற நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம், இதற்காக தான் ஐயாவை சந்திப்பதற்காக வந்திருக்கிறோம், அதிகமாக கேள்வி கேட்டு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை என கூறிவிட்டு சென்றார்.