அக்னிவீர் வாயு தேர்வு 


 

அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு பெங்களுருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடத்தவிருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு 22.05.2024 முதல் 05.06.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்துக்கொள்ளலாம்.

கல்வி தகுதி 


ஜனவரி 2, 2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜூலை 2, 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு இசை கருவி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பை பார்க்கவும்.

உடல் தகுதி


உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 162 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். எனவே, அக்னிவீர வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு நடைபெறவுள்ள பேரணியில் விருப்பம் உள்ள இளைஞர்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.