விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான ஜிஆர்பி தெருவிலுள்ள குடிசை வீடுகளில் புதியதாக பொருத்தப்பட்ட  மின் மீட்டர்களால் 500 ரூபாய் வந்த மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


விழுப்புரம் நகர பகுதியான ஜிஆர்பி தெருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்  மின்வாரிய சார்பில் வீட்டிலிருந்த பழைய மின் மீட்டர்களை எடுத்துவிட்டு புதிய மின் மீட்டர்களை பொருத்தி விட்டு சென்றனர். புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு ஒரே ஒரு மின் விசிறி இரண்டு டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்ட குடிசை வீடுகளில் மின் கட்டணம் 500 ரூபாய் கட்டியவர்களுக்கு இந்த மாதம் 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மின் வாரியத்திடம் புகார் அளித்தும் மின் வாரிய ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் 500 ரூபாய் மின் கட்டணம் கட்டிய நாங்கள் எப்படி 5 ஆயிரம் கட்டணம் கட்ட முடியும் என்பதால் மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் 300 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு சுமார் 2000 லிருந்து 3000 ரூபாய் வரை மின்கட்டணம் நிர்ணயத்தில் உள்ளதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்தனர். 


இந்த நிலையில் ABP நாடு செய்தி வெளியிட்டது இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் மின் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மின் கணக்கீட்டாளர் லட்சுமணன் முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வின் போது தெரியவந்தது. இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் மோசடி செய்த மின் ஊழியர் செய்தியை போடா வேண்டா எனவும் அவர்களின் மின் கட்டணத்தை தானே கட்டுவதாக கூறிய லட்சுமணன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண