விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஆட்டோவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆட்டோ டிரைவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


எல்லை மீறிய ஆட்டோ ஓட்டுநர்:


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள 28 வயதான பெண் நேற்றிரவு தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி நல்லாளம் கூட்டு சாலையில் திண்டிவனம் செல்ல பேருந்திற்காக நின்றிருந்தார். அங்கு வந்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் மகன் சுகன்ராஜ் தான் திண்டிவனம் சவாரி செல்வதாகவும், அங்கு சென்று அந்தப் பெண்ணை விட்டுவிடுவதாகவும் கூறி ஆட்டோவில் ஏறுமாறு கூறியதால் அதனை நம்பி அந்தப் பெண்மணியும் ஆட்டோவில் ஏறி உள்ளார். இதனைப் பயன்படுத்தி ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் பெருமுக்கல் மலைக்குச் செல்லும் மண் பாதையை ஒட்டிய முட்புதரில் அந்தப் பெண்மணியை கீழே இறக்கி பாலியல் அத்துமீறலில் முயன்றுள்ளார்.


உடனே அந்த பெண்மணி ஆட்டோ டிரைவரை அடித்து விட்டு அங்கிருந்து தப்பிய நிலையில் கணவருக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்த பெண்ணின் கணவர் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்னர். குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகன்ராஜ் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.