கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை மாணவர்களை தங்களது கிராமத்திற்கு ஏற்றி செல்லும் போது அந்த பேருந்தானது தச்சூர் ரவுண்டானா அருகே சென்டர் மீடியா கட்டை மீது மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகள் 36 பேர் படுகாயம் அடைந்தனர், இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் விபத்துக்குள்ளான பேருந்தில் காயமடைந்த மாணவர்களை பொதுமக்கள் உதவியுடன் 30க்கு பேர் பட்ட மாணவர்களை கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து தனியார் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த மாணவர்களை விசாரித்தனர், மேலும் இச்சம்பவத்தால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பின்னனர் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.