விழுப்புரம்: கோலியனூர் அருகே தனியார் பேருந்தின் பிரேக் பெடல் கட்டானதால் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுனர் சாலையின் ஓரமாக நிறுத்த முற்பட்டபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் உயிரிழப்பின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் வழியாக நெய்வேலி செல்லக்கூடிய லஷ்மி குருசாமி எனும் தனியார் பேருந்து விழுப்புரத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு பஞ்சமாதேவி அருகே வந்த போது பேருந்துவின் பிரேக் பெடல் திடீரென கட்டாகி உள்ளது. இதில் பேருந்துவின் பிரேக் பிடிக்காததால் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் பேருந்துவை சாலையின் ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் பேருந்துவின் டயர் சாலையின் ஓரத்திலுள்ள பள்ளத்தில் இறங்கி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதனையடுத்து பேருந்துவில் இருந்தவரக்ள் அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்துவின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். பேருந்து விபத்து குறித்து தகவலறிந்து வந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் தீயனைப்பு துறையினர் பேருந்துவில் சிக்கி கொண்டவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்படவே அவர்களுக்கு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கோலியனூரிலிருந்து பன்ருட்டி செல்லும் சாலை பணியானது நிறுத்தப்பட்டிருப்பதாலும் பேருந்துகளை ஓட்டுனர்கள் அதிவேகமாகவும், ஒரு வழி சாலையில் பேருந்துகள் இயக்கப்படுவதாலும்  போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.