விழுப்புரம் : தமிழ்நாடு அரசு கொடுக்கும் ஔவையார் விருது மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

Continues below advertisement

ஔவையார் விருது பெற விண்ணபிக்கலாம்

ஔவையார் விருது என்பது சமூக சீரதிருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.அந்த வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள்.

Continues below advertisement

பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

எனவே இவ்விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (http://awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 31.12.2025 ஆகும். 

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட 3 நகல் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.

ஔவையார் விருது

ஔவையார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலக மகளிர் தினத்தன்று இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.