நூறு நாள் வேலை திட்டத்தினை பொறுத்தவரை கூடுதல் வேலை நாட்களை எந்த வகையில் வழங்குவதற்கான திட்டம் தயார் படுத்தி வருவதால் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் கிராமங்களில் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் காணை, வீரமூர், பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும்  பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கொசப்பாளையம் கிராமத்தில்  ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 15 ஏக்கர் நிலத்தில் 5 ஆயிரம் மரக் கன்றுகளை அமைச்சர்கள் பெரியசாமி பொன்முடி, மஸ்தான் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.


பனமலைபேட்டை பகுதியில் பெரியார் சமத்துவபுரத்தினை பார்வையிட்டு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கிராம மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால் கிராம சாலைகளை மேம்படுத்த பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க 4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதால் அந்த  பணிகள் ஒருமாதகாலத்தில் தொடங்கப்படும் எனவும் இந்தியாவிலையே எந்த முதலமைச்சரும் செய்யாததை தமிழக முதல்வர் செய்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு உருவாக்கப்பட்ட அரசாகவும் இந்தியாவின் தலைசிறந்த அரசாக தமிழக அரசு உள்ளதாக கூறினார்.


நூறு நாள் வேலை திட்டத்தினை பொறுத்தவரை கூடுதல் நாட்களை எந்த வகையில் வழங்குவது 40 ஆயிரம் கிராமங்களில் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெற திட்டத்தினை தயார்படுத்தி வருவதால் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கடந்தாண்டு 148 சமத்துவபுரம் 90 கோடி செலவில்  சீரமைக்கபட்டுள்ள நிலையில் இந்தாண்டு 88 சமத்துவபுரம் 68 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் சமத்துவபுரத்தினை கண்டுகொள்ளாமலையே அதிமுக அரசு செயல்பட்டதாக தெரிவித்தார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.