புதுச்சேரி ஜி20 மாநாடு அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்று உள்ளது. ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் பங்கேற்கும் கூட்டம் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதில் மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஜி20 முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நவம்பர் வரை நடைபெற உள்ளது. புதுச்சேரியின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து செல்லும் வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தலைமையில் 75 நபர்கள் பங்கேற்க உள்ளனர். போலீசார் 3 முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.


ஆரோவில் பகுதியில் செல்ல தடை :


மேலும் ஜி20 மாநாட்டில் பங்கேற்ப வருபவர்கள், சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஜி20 மாநாட்டையொட்டி புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் இருந்து கடைகள் அகற்றப்பட்டது. அத்துடன் வரும் 30ஆம் தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் மாலை 3 மணி வரை பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், ஆரோவில் தியான மையத்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரியிலும் ஜி20க்கான நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து வரும் 30, 31 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.