விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 41 பயனாளிகளுக்கு ரூ.35.05 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (26.01.2024) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் அவர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தியதுடன், குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.18,89,013/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.78,850/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில், 10 ரூ.38,990/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.11,33,900/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.25,000/-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 05 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.13,104/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.26,340/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 41 பயானிகளுக்கு ரூ.35,05,197/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 281 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, விழுப்புரம் நகரில், குடியரசு தின விழாவினை முன்னிட்டு, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.