திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தங்க பத்திர முதலீடு செய்யலாம். இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார். தங்க பத்திர முதலீடு என்பது இந்திய ரிசர்வ் வங்கியானது தங்க பத்திர முதலீட்டு திட்டத்தினை 19-ந்தேதிஇன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலான காலத்திற்கு வெளியிட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி தங்கத்தினை ஒவ்வொரு யூனிட்களில் வாங்கி கொள்ளலாம். ஒரு யூனிட் என்பது 24 காரட் தங்கத்தின் ஒரு கிராமிற்கு சமம் ஆகும். தற்சமயம் ஒரு யூனிட்டின் மதிப்பு ரூபாய் 5 ஆயிரத்து 409 ஆகும். இந்த தங்க பத்திர முதலீட்டு திட்டமானது திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் நிலையங்களிலும் இன்று முதல் 23-ந்தேதி வரையில் விற்பனை செய்யப்பட உளளது.
தங்கத்தினை பத்திர வடிவில் வாங்குவதால் பாதுகாப்பு பற்றிய பயமும், தங்கத்தின் தரத்தினை பற்றிய பயமும், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி. ஆகிய செலவுகள் இல்லை என்றும் பொதுமக்கள் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியுடன் ரிசர்வ் வங்கியினால் அளிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான லாபம் தரக்கூடிய திட்டமாக இந்த தங்க பத்திர முதலீடு உள்ளதால் பொது மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்ற திட்டமாகவும் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 17-ம் ஆண்டுகளில் இந்த திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் தற்சமயம் ஏறக்குறைய இரட்டிப்பு ஆகி உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என்றும். மேலும் விவரங்களுக்கு 7904125369, 9566693004 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று. இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்து உள்ளார்.