வாணியம்பாடி அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய மொட்டையடித்து காரியம் செய்து அமைதி ஊர்வலம் நடத்திய தேமுதிகிவினர். விஜயகாந்த் படம் முன்பு வித விதமான உணவு படையல் வைத்து பூஜை 5000 பேருக்கு அன்னதானம் செய்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கபேட்டை கிராமத்தில் மறைந்த நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தியடைய  தேமுதிக மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன்,தலைமை பொதுகுழு உறுப்பினர் கில்லிகுமார் ஆகியோர் தலைமையில் தேமுதிகிவினர்  காரியம் செய்தனர்.



 

அதில் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய தேமுதிக நிர்வாகிகள்,தொண்டர்கள் மொட்டையடித்து விஜயகாந்த் படத்திக்கு முன்பு  வித விதமான உணவு மற்றும் பலகாரங்கள்  படையல் வைத்து பூஜை செய்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சுமார் 5000 பேருக்கு பிரியாணி  வழங்கினர்.

 

இதற்கு முன்னதாக அக்கட்சியினர் மற்றும்  முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து அந்த கிராமம் முழுவதும் வீதி வீதியாக அமைதி ஊர்வலம் நடத்தினர். இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.