வேலூர் : புதிதாக 30 நபர்களுக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 30 நபர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது .

Continues below advertisement

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  (வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்) புதிதாக 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  . மூன்று மாவட்டங்களிலும் இன்று உயிரிழப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 30  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,855-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 17 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 47,439-ஆக அதிகரித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மரணங்கள் எதுவும் பதிவுசெய்யப்படாத நிலையில், கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,109-ஆகவே உள்ளது .

Continues below advertisement

இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  307  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 11  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,560 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 18 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41,611-ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புக்கு எந்த இறப்பும் படியாத நிலையில்  கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 755 ஆகவே உள்ளது. இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  194 நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் , இன்று 7 நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,599  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27,862-ஆக அதிகரித்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படாக நிலையில் , திருப்பத்தூர்  மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 614-ஆகவே உள்ளது. இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  123   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில்  2878 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 1820 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1712  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் 0.7 % நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  0.7 % நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 0.8 % நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

Continues below advertisement
Sponsored Links by Taboola