கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க தமிழத்தில் உள்ள பள்ளிகளோடு சேர்த்து பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் என அனைது தனியார் மற்றும் அரசு கல்லூரிகளும் மூடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அரசும் கல்லூரி நிர்வாகமும் அறிவித்த நிலையில், கடந்த ஒன்றறை ஆண்டுகளாக இணைய வழியில் கல்வி பயின்று வந்தனர்.  இதனையடுத்து ஒன்றறை ஆண்டுகளுக்கு கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.



 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நேரடியாக தேர்வுகள் நடைபெறும் என தேர்வுக்காண அட்டவணைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். இந்நிலையில் நேரடியாக தேர்வு நடத்துவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த செமஸ்டர்களை போல இணைய வழியிலேயே இம்முறையும் தேர்வுகளை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி உட்பட 5 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட முன்றனர். அப்போது அவ்வழியாக வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். 

 

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது, கடந்த மாதம் செப்டம்பர் 1-ஆம் தேதி தான் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அப்போதும் கூட தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் மழை காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. இடைப்பட்ட காலத்திலும் முறையாக கல்லூரிகள் நடைபெறவில்லை. எங்களிடம் புத்தகமோ அல்லது வகுப்பெடுத்த நோட்டுகளை எதுவுமில்லை. மேலும் 20 நாட்களுக்குள் செய்முறை முடித்து, செய்முறை நோட்டுக்களை ஒப்படைக்க கூறியுள்ளனர். புத்தகம் இன்றியும், நோட்ஸ் இல்லாமலும் எங்களால் எப்படி தேர்வெழுத முடியும். ஆகவே கடந்த காலங்களில் நடைபெற்றது போலவே இம்முறையும் செமஸ்டர் (பருவ தேர்வு) தேர்வுகளை இணையவழியிலேயே நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.