புதிய கட்டுப்பாடுகள்:


வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது .


தற்போது நோய்த்தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று நோய் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை பூங்கா , அமிர்தி மிருக காட்சி சாலை , மற்றும் மாநகராட்சி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களும்  ,பொதுமக்கள் நலன் கருதி மூடப்படுகிறது.


மேலும் அரசு வழிகாட்டு  நெறிமுறைகளின்படி அனைத்து பேருந்துகளிலும் 50 சதவீத பொதுமக்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் . உணவு விடுதிகளில் 50 சதவீத மக்களை மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட வேண்டும் .




விதிமுறைகளை மீறி செயல்படும் உணவு விடுதிகளின்  உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும்போது எங்கெங்கு அதிகமான கூட்டங்கள் காணப்படுகிறதோ சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சொந்தமான கடைகள் , பலசரக்கு கடைகள் , ஜவுளிக்கடைகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும் பேருந்து நிலையம் , உழவர் சந்தை காய்கறி மார்க்கெட் , போன்ற இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த தடையை மீறி செயல்படுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரம் குறித்து அறிந்து மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்


வேலூரில் இன்று 27 பேருக்கு கொரோனா: முழு விவரம்.


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  (வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்) புதிதாக 59 நபர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  . மூன்று மாவட்டங்களிலும் இன்று உயிரிழப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.


வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 27  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48136 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 31 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46,716 ஆக அதிகரித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மரணங்கள் எதுவும் பதிவுசெய்யப்படாத நிலையில் ,  கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1095 ஆகவே உள்ளது .


இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  325  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9  க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .




இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 13  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42013  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41036 ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புக்கு , வேலூர் மாவத்தை போலவே , உயிர் இழப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 742 ஆகவே உள்ளது    .


இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  235 நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் , இன்று  19  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28310  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27470 ஆக அதிகரித்துள்ளது.




இன்று பலி எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படாக நிலையில் , திருப்பத்தூர்  மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 601 ஆகவே உள்ளது   . இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  239   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில்  2921 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 2201 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1724  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் 1.1 % நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  1.1 % நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.0 % நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .