வேலூர் மாவட்டத்தில் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்ட விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு ,முதன்மைச் செயலாளர்கள், அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி வேலூர் ஆர் காந்தி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




 


இந்தகூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், "கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் முதலாவது கூட்டம் இக்கூட்டம், கள ஆய்வை வேலூரில் இருந்து தொடங்கியதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இந்த கூட்டத்தை பொருத்தவரைக்கும் ஏதோ குறைகளை கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, இதனுடைய நோக்கம் அதுவல்ல மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாக கருதித்தான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். மக்களுக்காகத்தான் அரசு மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் ஒரு நல்ல அரசாக அமைந்திட முடியும் இதை நாங்கள் மட்டுமல்ல நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்தித்தான் நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும் சுனக்கம் காட்டக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 20 மாத காலத்தில் என்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம் இதற்கெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்பு தான் காரணம் அதற்காக நன்றி கூறுகிறேன். இந்த ஆய்வின்போது குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் துறை வழங்கக்கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள்


 




 


ஊரக மேம்பாடு விளிம்பு நிலை மக்களுடைய நலன் நகர்ப்புற வளர்ச்சி சாலை மேம்பாடு வாழ்வாதாரத்தை உயர்த்துதல் இளைஞர் திறன் மேம்பாடு பொதுக் கட்டமைப்பு வசதிகள் கல்வி மருத்துவம் குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக மக்களை சென்றடைகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள் துறைத்தலைவர்களைத்தான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி இருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்த கட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து அந்த பணியை இப்போது நிறைவேற்ற தொடங்கி இருக்கிறேன். பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது.


 




 


இதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் சிறப்பாக பணியாற்றக் கூடிய அலுவலர்களை பாராட்டுங்கள். அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடு தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் அத்தகைய சிந்தனையோடு தான் திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கக் கூடிய வாக்குறுதிகள் இதையெல்லாம் முதற்கட்ட அடிப்படையாக வைத்து திட்டங்களை தீட்டினோம், பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் அலுவலர்களாகிய உங்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டும் வகையிலும் உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும். அரசு திட்டங்களுக்கான நிதி வீணாகி விடாமல் விரைவாகவும் சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும். திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாக செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


 




 


அதேபோல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ சுணக்கமாக நடந்தாலோ அது அரசின் மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது எனவே இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்தந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். டெண்டர் விட்டோம் திட்டத்தை முடித்து தர வேண்டியது ஒப்பந்ததாரரின் வேலை என்று இருந்து விடாமல் அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கடமை அரசு அலுவலர்களாகிய உங்களுக்கு உள்ளது. சார் நிலை அலுவலர்களின் பணியை கண்காணித்து ஒருங்கிணைத்து செயல்படாததால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும் தொய்வும் ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை கண்காணிப்பு கூட்டங்களை திட்டமிடும் கூட்டங்களை கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் மக்களோடு கலந்து பழகுங்கள் அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள், அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவதாக இல்லாமல் உங்கள் கனவு திட்டங்களையும் அரசுக்கு சொல்லி அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும். 


 




மாவட்ட ஆட்சியர்கள் உங்கள் மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும். அடுத்தடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது. அதன் பிறகு அமைச்சருடைய துறை மாணவி கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது.புதிய புதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்து விடும் அதற்கு முன்னதாகவே இதுவரை அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். அடுத்தடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது அதன் பிறகு அமைச்சருடைய துறை மாணவி கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது புதிய புதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்து விடும் அதற்கு முன்னதாகவே இதுவரை அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் உடைய நோக்கம். அதற்கு இந்த ஆய்வுக்கூட்டம் ஒரு சிறப்பான முதல் படியாக அமைந்திருக்கிறது என கருதுகிறேன்" எனப் பேசினார்.