விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நந்தகுமார் வயது (19) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நந்தகுமார், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அவரது நண்பர்கள் 2 பேருடன் மரக்காணம் சென்ற நந்தகுமார், அதனையடுத்து அதிகாலையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்தி கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே வீட்டில் இருந்த மகள் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 


மகளை பற்றி உறவினர் வீடுகள் மற்றும் அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடினர். அப்போது சிறுமி, 3 வாலிபர்களுடன் திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் சென்றது தெரிய வந்தது. உடனே சிறுமியின் பெற்றோர், திருவண்ணாமலையில் உள்ள உறவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறவினர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று, பஸ்சில் இருந்து இறங்கிய சிறுமி மற்றும் நந்தகுமார், அவரது நண்பர்கள் 2பேரை மடக்கி பிடித்தனர்.இதனால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.




இதில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர், மரக்காணம் அருகில் உள்ள பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பிரம்மதேச போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில்  திருவண்ணாமலைக்கு வந்த பிரம்மதேச போலீசாரிடம் சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களை திருவண்ணாமலை போலீசார் ஒப்படைத்தனர். மேல் விசாரணைக்காக அவர்களை பிரம்மதேச போலீசார் அழைத்து சென்றனர்.


 


இதனைத்தொடர்ந்து  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது வாய்ப்பிருக்கும்  தானிப்பாடியில் உள்ள ஒரு கோவில் திருமணம் நடைபெற இருப்பதாக தானிப்பாடி கிராம நிர்வாக அதிகாரி முத்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை இரவு சிறுமியின் வீட்டிற்கு தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சமூக நல அலுவலர் அம்சவல்லி, சைல்டு லைன் அதிகாரிகள் சென்று பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.


பின்னர் சிறுமியை மீட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தண்டராம்பட்டு தாலுகாவில் அடிக்கடி இதுபோன்ற குழந்தை திருமணங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணத்தை தடுக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.