தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என நேற்று மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை துவங்குகிறது. இதையொட்டி  திருவண்ணாமலை நகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பிரித்து அனுப்பும் பணிகள் முழுவீச்சாக நடைப்பெற்று வருகிறது.


திருவண்ணாமலை மைய அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வேட்புமனுத் தாக்கலுக்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் மற்றும் உபகரணங்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அதிகாரிகள் பிரித்து அனுப்பப்பட்டது.  இதனிடையே நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகளின் மூடப்பட்டும் மற்றும் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் அனைத்தும் வண்ணங்களை அடித்து அழிக்கப்பட்டு வருகின்றனர். 



திருவண்ணாமலை மாவட்டத்தை  பொருத்தவரை , 4 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளைக் கொண்டது.


இவற்றில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில்  144 வாக்கு சாவடிகளும் ஆண்,  பெண் வாக்காளர்கள் 142135 நபர்கள் வாக்களிக்க உள்ளனர். 


மூன்று நகராட்சிகளான 


1. ஆரணி - 33 வார்டுகள்  


2. வந்தவாசி - 24 வார்டுகள்  


3. திருவந்திபுரம் - 27 வார்டுகள்


4.செய்யாறு - 27 வார்டுகள்




 


பேரூராட்சிகள் விவரம்


1. செங்கம் - 18 வார்டுகள்  27 வாக்கு சாவடிகள் உள்ளது.


2. புதுப்பாளையம் -  12 வார்டுகள்


3.  போளூர் - 18 வார்டுகள்


4. கண்ணமங்கலம் - 15 வார்டுகள்


5. களம்பூர் - 15 வார்டுகள்


6. சேத்பட் - 18 வார்டுகள்


7. தேசூர் - 12-வார்டுகள்


8. பெரணமல்லூர் - 12-வார்டுகள்


9. கீழ்பெண்ணாத்தூர்- 15 வார்டுகள்


10. வேட்டவலம்- 15 வார்டுகள்


திருவண்ணாமலை மாவட்டத்தின் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில்  மொத்தம் 273 வார்டுகளும் 455 வாக்குசாவுடிகளும் 3,81325 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளது.