ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (48) இவரது மனைவி தாட்சாயிணி (38) இவர்களுக்கு தமிழ் செல்வன் (21), குணால் (19), கோகுல் (17) என்ற 3 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள, சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்றார். இவர்களுடைய வீட்டில் இருந்து இந்த நிலம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தாட்சாயிணி அரும்பாக்கத்தில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்காக தாங்கள் குத்தகை எடுத்துள்ள விவசாய நிலத்திற்கு ஓட்டி சென்றார். அதனை தொடர்ந்து மாலை நீண்ட நேர மாகியும் தாட்சாயிணி வீடு திரும்ப வில்லை. இதனால் ராஜேந்திரன் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது தாட்சாயிணி விவசாய நிலத்தில் இல்லை மாடுகள் மட்டும் மேய்ச்சலில் இருந்தது. இதனையடுத்து ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கையும் தேடி கிடைக்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு வரை தேடிய நிலையில் 1 மணியளவில் விவசாய நிலம் அருகே உள்ள மற்றொருவருக்கு சொந்தமான வேர்க்கடலை நிலத்தில் தாட்சாயிணி சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து விரைந்து சென்று இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் அங்கேயே கதறி அழுந்தார். அவரது உடல் முழுவதும் நககீறல்களும், சிறு சிறு காயங்களும் இருந்தது, தலை முழுவதும் மண்ணாக இருந்துள்ளது. அவரை யாரோ பாலியல் வன்கொடுமை முயற்சி செய்து அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில், பிரம்மதேசம் ஆய்வாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, துணை ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் அதிகாலையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாட்சாயிணை பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது