திருவண்ணாமலை ரவுண்டானாவில் உரிய ஆவணங்களுடன் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்டோ ஓட்டுனர்களிடம் ஒட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டறியப்பட்டு ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறக்கி விட்டு பேருந்து நடத்துனரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கினார். பின்னர் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என சரி பார்க்கப்பட்டு ஆவணங்கள் இல்லாத இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது. 


 


 




பத்திரிகையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் பேட்டியளிக்கையில்; 


திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்டோர்கள் வாகனங்கள் ஓட்டினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு , வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் என்றார். இன்று ஒருநாளில் மட்டும் சிறுவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் 48 வாகனங்களை பறிமுதல் செய்யப்படு உள்ளோம் , மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய 60 வாகனங்களையும், உரிய ஆவணங்கள் இன்றி 25 ஆட்டோக்கள் பறிமுதல் செய்துள்ளோம். நகர் பகுதியில் ரோந்து பணியில் காவல்துறை வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளோம். அதேபோல் இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.


 




திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளோம். மேலும், சாராயம் காய்ச்சி, விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குட்கா விற்பனை செய்த 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்த புதிய நடைமுறையை மேற்கொள்ள பட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என்று தெரிவித்தார்.