தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய தென்மேற்கு பருவமழை துவங்கிய பிறகு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு என கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் கனமழை, மிதமான சாரல் மழையும், சில பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 96.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர்-35.00 மி.மீ, தண்டராம்பட்டு- 10.20 மி.மீ, போளூர்- 10.20 மி.மீ, செய்யாறு- 4.00மி.மீ, வெம்பாக்கம்- 00.0 மி.மீ, ஜமுனாமரத்தூர்- 1.30 மி.மீ, வந்தவாசி- 00.0 மி.மீ, சேத்துப்பட்டு- 24.60 மி.மீ, ஆரணி-0.00 மி.மீ, கலசபாக்கம்-5.00 மி.மீ, செங்கம்- 96.40 மி.மீ, திருவண்ணாமலை-2.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 70 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. திருவண்ணாமலை தாலுகாவில் 5 ஏரிகள், தண்டராம்பட்டு தாலுக்காவில் 12 ஏரிகள், ஆரணி தாலுக்காவில் 13 ஏரிகள், செய்யாறு தாலுக்காவில் 13 ஏரிகள், வந்தவாசி தாலுகாவில் ஏரியில் ஒரு ஏரி என நிரப்பியுள்ளது. இது தவிர 75-ல் இருந்து 80 சதவீதம் வரை 35 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 70 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 214 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 7 மீதமுள்ள 7ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படாமல் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக செங்கம் பகுதியில் 96.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. செங்கம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக செங்கம் வழியாக ஓடும் செய்யாறில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையில் நீர் மட்டம் 116.55 அடி அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். அனைக்கு 390 கன அடி தண்ணீர் வந்து கொணடு இருக்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.செங்கம் தாலுக்கா குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 41 அடி அணையின் மொத்த உயரம் 59 அடியாக உள்ளது.