திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மருத்துவ விற்பனையாளர் ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் கிஷோர் வயது (45) இவர் நேற்ற்ய் பணி நிமித்தமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது டிரைவருடன் சொகுசு காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் புறவழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதுச்சேரிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் சென்ற காரும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.




அதில் இரண்டு கார்களின் முன் பக்கம் முழுவதுமாக நொறுங்கி சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தனியார் கம்பெனி மருந்து விற்பனையாளர் கிஷோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிக்கொண்ட சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் பலத்த காயமடைந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தந்திராம்பாள் உள்ளிட்ட ஆறு பேர் மற்றும் சென்னையில் வந்த காரின் ஓட்டுநர் ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.




 


தகவல் அறிந்த காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கிஷோரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சாலை விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.


Gold, Silver Price : அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. சவரனுக்கு ரூ. 45,000 கடந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்