crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் வழிபறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது

திருவண்ணாமலை பகுதியில் லாரி ஓட்டுனரிடம் வழிபறியில் ஈடுபட்ட 5 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வைகைச்செல்வன் வயது (45) என்பவருக்கு சொந்தமான லாரியில் விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் குபேந்திரன் என்பவர் கடலூரில் இருந்து மருத்துவ மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவா மாநிலத்திற்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது வேட்டவலம் வழியாக திருவண்ணாமலையை நோக்கி  இரவு குபேந்திரன் லாரியை ஓட்டிச் சென்றார். ஆவூரை அடுத்த வயலூர் கூட்ரோடு அருகில் சென்று கொண்டு இருந்த போது லாரியின் பின்பக்க டயர் திடீரென பஞ்சரானது. இதனை சரி செய்ய வயலூர் கூட்ரோடு அருகே உள்ள பஞ்சர் கடைக்கு செல்ல லாரியில் இருந்து டிரைவர் குபேந்திரன் இறங்கிய போது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென குபேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய்2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

Continues below advertisement

 


 

இதுகுறித்து வேட்டவலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் துணை ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் , வழிபறியில் ஈடுபட்டது ராஜந்தாங்கல் மெயின் ரோட்டை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரகாஷ் வயது (21), சக்தி மகன் மணிகண்டன் வயது (19) மற்றும் 15, 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சலுகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 28 இவர் நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பாதிரி என்ற கிராமச் செல்லும் வழியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் திடீரென மணி என்பவரிடம் கத்தியை காட்டி பணம் செல்போன் என அனைத்தையும் கேட்டுள்ளனர்.

செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய துணை ஆய்வாளர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்ததில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது வந்தவாசி நகர சன்னதி தெருவை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர் கடலூர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனை காவல்துறையினர் தொலைபேசி தேடி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola