ஆம்பூரில் தனியார் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் ஷெட்டர் உடைந்து விழுந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேம்நாத். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் லாரி சர்வீஸ் (எம்.ஏ.ஆர்.) அலுவலகத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை ஹேம்நாத் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் லாரியை நிறுத்த வந்துள்ளார். அப்பொழுது லாரி அலுவலகத்தில் இருந்த ஷெட்டர் மீது எதிர்பாராவிதமாக மோதியுள்ளது.
பின்னர் ஹேம்நாத் லாரியை நிறுத்திவிட்டு, ஷெட்டரை சரிசெய்ய முற்படும்போது, எதிர்பாராவிதமாக ஷெட்டர் முழுவதும் உடைந்து ஷேம்நாத் மற்றும் காவலாளி கலைமணி மீது விழுந்துள்ளது.
இதில் ஹேம்நாத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த காவலாளி கலைமணியை மீட்ட அங்கிருந்த பணியாளர்கள் அவரை சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்நு இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் ஹேம்நாதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தின் ஷெட்டர் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.