மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேசியுள்ளார்.

 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேசியதாவது: போலியான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவான நமது பெற்றோர் பயன்படுத்திய சிறு தானியங்களை பயன்படுத்துங்கள். சிறந்த உணவு சிறு தானிய உணவு தான் என்றார்.  

 

நுகர்வோர் தின விழிப்புணர்வு குறித்து பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி, ஓவிய போட்டி என பல்வேறு கல்லூரி பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.  அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

 

இதனை தொடர்ந்து வேளாண் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அரங்கு அமைத்து காட்சி‌படுத்தப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணியம்,மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.