திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஐந்து இடங்களில் ஆதார் பிடிக்கும் மையம் இயங்கி வருகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் ஒன்று‌.

 

இந்த நிலையில் நியாய விலை கடைகளில் தற்போது  குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி இல்லை குடும்பத்தில் உள்ள நபர்களின் பொருட்கள் நியாய விலை கடைகளில் தரப்பட மாட்டாது என போலியாக வதந்தி பரப்பியதாலும் கைரேகை நியாய விலை கடைகளில் கண்டிப்பாக பதியப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆதார் கார்டு புதிதாக பிடிக்கவும் அதேபோல் பயோமெட்ரிக் கைரேகை அமைக்கவும் ஆதார் மையங்களில் குவிந்து வருகின்றனர்.

 

மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் விடியற்காலை முதலே பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பெற்றோர்கள் ஆதார் கார்டுகள் பிடிக்க குவிந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல மணி நேரம் காத்திருந்தாலும் நெட்வொர்க் ப்ராப்ளம் இருக்கு, ஐடி ஓபன் ஆகவில்லை, என சாக்குபோக்கு சொல்லியும் தட்டிக் கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.



 

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே ஒரு ஐடி பணியாளர் மூலம் ஆதார் கார்டு பிடிக்க படுவதால் ஒரு நாளைக்கு 40அல்லது 50 பேருக்கு மட்டுமே பிடிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்படுவதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

 

மேலும் திருப்பத்தூரில் இருந்து வெளியே ஊருக்கு குடி பெயர்ந்தவர்கள் கூட தற்போது ஆதார் கார்டு பிடிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

 

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டுகளை பிடிக்க பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரிசை கட்டி நிற்பதால் கூடுதல் ஐடியாளர்களை பணிய அமர்த்த வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.