திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் என்பவருடை மகன் முஷரப் வயது (19) என்ற இளைஞரை எருது விட்டும் விழாவினை பார்க்க நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது இளைஞரை மாடு முட்டியது அதில் இளைஞர் உயிரிழந்ததாக ஒரு புறம் கூறப்படும் நிலையில், எருது விடும் விழாவின் போது காவல்துறையினர் தடியடி நடத்தி லத்தியால் வயிற்றில் குத்தியதன் காரணமாகத்தான் முஷரப் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறும் நிலையில், கல்நார்சாம்பட்டி பகுதியில் நேற்று இரவு கலவரம் நடைப்பெற்றது. இதன் காரணமாக சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரை சுமார் 5-மணி நேரமாக முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


 




அப்போது ஆயுதப்படை காவலர் திருமால் என்பவரை அங்கு இருந்தவர்கள் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அடங்காத இளைஞர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம், அதிவிரைவு படை வாகனம், காவல் ஆய்வாளர்கள் வாகனம் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் சிறிய தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் இறந்த முஷரப்பின் உடல் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.


 




அப்போது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உட்பட மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மருத்துவ மனைக்கு சென்று முஷ்ரப் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததாலும் இங்கேயே இளைஞரின் உடல் இருந்தால் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், முஷரப்பின் உடல் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு இன்று அதிகாலை காலை அனுமதிக்கப்பட்டது.


 




இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் RDO பானு தலைமையில் பிரேத பரிசோதனையானது 1-மணி நேரம் நடைப்பெற்ற பிரேத பரிசோதனைக்கு பின்பு இறந்த முஷரப் உடல் தந்தை தவுலத்'திடம் கையொப்பம் பெற்று ஒப்படைக்கப்படது.இந்த பிரேத பரிசோதனையின் அறிக்கை மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பு தெரியவரும் என்ற நிலையில், அந்த அறிக்கையில் முஷரப் மாடு முட்டி இறந்தாரா அல்லது காவல்துறையினர் தாக்கியதில் தான் இருந்தாரா என்பது தெரியவரும். முஷரப்பின் உடல் அவருடைய சொந்த ஊரான பெரியகம்மியம்பட்டு கிராமத்திற்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது முஷரப்பின் உறவினர்கள் முஷரப் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயும் முஷரப் அண்ணனுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.