அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே உயிரைவிட்ட தங்கை - சோகத்தில் மூழ்கிய கிராமம்
அவரது வீட்டின் அருகில் உள்ள சீனிவாசனின் தங்கை தவமணி (72) , அண்ணன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்துள்ளார்.
Continues below advertisement

ஒரே நேரத்தில் உயிரிழந்த அண்ணன் - தங்கச்சி
Source : Whatsapp
வாணியம்பாடி அருகே அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே அதிர்ச்சியில் தங்கை உயிரிழந்தார். வயது முதிர்ந்த அண்ணன் - தங்கை ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், (90) சிலம்பாட்ட வீரரான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். சீனிவாசன் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,
இன்று காலை உயிரிழந்தார். அவரது வீட்டின் அருகில் உள்ள சீனிவாசனின் தங்கை தவமணி (72) , அண்ணன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடியே தவமணியும் உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அண்ணன் - தங்கை இருவரின் உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, அவர்களது, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அண்ணன் இறந்த செய்தியை கேட்ட அடுத்த நொடியே தங்கையும் உயிரிழந்த சம்பவம், அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.