திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை பார்வையிட அவருடைய வாகனத்தில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு வந்த அதிகரிகளிடம் விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன் மூலம் 38 கோடியே 74 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால் காலதாமதமாகி உள்ளது.
இந்த பாலத்தை பொறுத்த வரையில் திருவண்ணாமலையின் மையத்தில் இருக்கிற ஒரு பாலம். தண்டரை ரெயில் நிலையம் முதல் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இந்த பாலம் அமைகிறது. இரவு, பகல் என்று பாராமல் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. டிசம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடனே முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த பாலத்திற்கு கூடிய விரைவில் திறப்பு விழா நடைபெறும். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் திருவண்ணாமலையில் புதிய பேருந்து ஈசானிய லிங்கம் பகுதியில் உள்ள இடத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது ஆனால் அந்த இடத்தில் நகராட்சியின் குப்ப கிடங்கு உள்ளது. இதனால் பேருந்திற்காக வரக்கூடிய பொதுமக்கள் நோய்வாய் ஏற்பட சாத்திய கூறுகள் உள்ளன என பொதுமக்கள் என்னிடம் கூறுகின்றனர். இதனால் புதியதாக கட்டப்பட்ட உள்ள பேருந்து நிலையத்தை வேறுபகுதியில் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தினாலும், அதே நேரத்தில் நகர மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நகருக்கு அருகில் உள்ள புறப்பகுதியில் அமைந்தால் தான் வருங்காலத்தில் பேருந்து நிலையத்தினை விரிவுபடுத்தப்படும். பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை அதன் அடிப்படையில் உபயோகத்தில் இல்லாத ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள விவசாயத்துறைக்கு சொந்தமான டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் இடம் மற்றும் அதை ஒட்டியுள்ள வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடம் என 10 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் சென்னைக்கு செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை, தெற்கு பகுதி சாலகளுக்கு எளிதாக செல்ல முடியும். எனவே, இந்த இடத்தில் புதிய மத்திய பேருந்து நிலையம் அமைப்பதற்கு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், வேலூர் கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சுந்தர், உதவி கோட்ட பொறியாளர் பாபு, மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்