திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சோலா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலநீர் எடுப்பு சான்று வழங்க ரூபாய் 50,000 லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை உதவி நிலவியலாளர் சிந்தனைவளவன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சோலா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் பல வருடங்களாக இயங்கி வருகிறது. இதனை நடத்தி வருபவர் புது வாணியங்குளத் தெருவை சேர்ந்த லியாகத் அலி வயது (46) , மேலும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீரை நிலத்தடியில் இருந்து எடுக்க நிலநீர் எடுப்பு சான்று அனுமதி பெறக்கோரி சென்னை தரமணியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் 6000 ரூபாய் காண வங்கி வரை காசோலையை (15.9.2022) அன்று விண்ணப்பித்தார். இது சம்பந்தமாக லியாகத் அலியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் படி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி நிலவியலாளர் சிந்தனைவளவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டப்பட்டார்.


 




 


அதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர்வலைத் துறை உதவி நிலவியலாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனுமதி சான்று பெற்று தர 50000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த லஞ்சம் தர விருப்பம் இல்லாத லியாகத் அலி இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் திருவேல்முருகனிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினரின் அறிவுரைப்படி  அலுவலர் சிந்தனை வளவனை லியாகத் அலி செல்போனில் தொடர்பு கொண்டு அவர் கேட்ட பணத்தை தருவதாக கூறினார். அப்போது சிந்தனை செயலகம் பணத்தை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.  


 




 


பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லியாகத் அலியிடம் கொடுத்து அனுப்பினர். மேலும் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர் மைதிலி மற்றும் காவல் துறையினர் கோபிநாத், ரஜினி ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மறைந்து இருந்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சிந்தனை வளவன் 50,000 ரூபாயை லியாகத் அலியிடமிருந்து பெற்றதும் அவரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.  இதையடுத்து, அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலநீர் எடுப்பு அனுமதி சான்று வழங்குவதற்கு 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி நிலவியலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.