தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,நோய் தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பபட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த  பெட்டியில் போட்டு வந்தனர்.


இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும், என அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் சாலை பட்டா போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக வழங்கினர்.


 




 


அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 2 நபர்கள் அலுவலகத்தில் அரங்கத்தில் உள்ளே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அருகில் பாதுக்கப்பிற்காக போடப்பட்ட காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பெட்ரோல்  பாட்டிலை பிடுங்கி வீசிவிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர்கள் திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் சசிக்குமார் என்றும் நாங்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் என்றும் கூறினர். ஜெயராமன் மேல் நீர்தேக்க தொட்டியில் பணியாற்றி வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு நான் ஓய்வு பெற்றேன்.


அதன் பிறகு எனது மகன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 01.01.2021 வரை அரடாப்பட்டு கிராமத்தில் உள்ள  மேல் நீர் தேக்க தொட்டி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு பணியாற்றியதற்கான மாத சம்பளம் இதுவரையில் அளிக்கப்பட வில்லை என்றும், பின்னர் நான் ஓய்வு பெற்ற நிலையில் எனது மகன் சசிகுமார் கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகின்றார்.  தற்போது வரையில் சசிகுமாருக்கு எந்தவொரு ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும். இந்த ஊதியத்தை பற்றி பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டால் நீங்கள் எனக்கு 50 ஆயிரம் பணம் கொடுத்தால் உங்களுடைய ஊதிய பணம் கொடுப்பேன் என்று எங்களிடம் தெரிவிக்கின்றார் .




இதனால் நானும் எனது மகன் சசிகுமார் ஆகிய இருவரும் சென்ற மாதம் வட்டார வளச்சி துறை அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலரிடம் எங்களுடைய கோரிக்கையாக 22 மாத சம்பளத்தை பெற்று தரும்படி அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிட்டு மனு அளித்தோம், ஆனால் எங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை. பின்னர் நாங்கள் மீண்டும் எங்களது கிராம தலைவரிடம் சென்று முறையிட்டோம் அவர் எங்களுக்கு எந்தவொரு  உத்திரவாதமும் தர மறுக்கிறார்.  


பின்னர் தலைவர் நீங்கள் யாரிடமும் வேண்டும் என்றாலும் சென்று மனு அளியுங்கள். மீண்டும் அந்த மனு என்னிடம் தான் வரும் நான் பார்த்துக்கொள்கிறேன், என்றும் எங்களிடம் தெரிவிக்கின்றார். எங்களது குடும்பமே என்னுடைய ஒருவர் சம்பளம் மூலமாகத்தான் நடத்திக்கொண்டு வந்தோம். தற்போது கடந்த 22 மாதங்களாக சம்பளம் வராததால் எங்களது குடும்பமே உணவின்றி தவித்து வருவதாகவும் ,அதனால்தான் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளோம்.  எங்களது உயிரை விட்டால்தான் அதிகாரிகள் எங்களது கோரிக்கை ஏற்பார்களா என்று எங்கள் உடல் மீது பெட்ரோல்  ஊற்றிக்கொன்று தீக்குளிக்க முயற்சி செய்தோம் என்று விசாரணையில் தெரிவித்தார்.


 




 


அதனைத்தொடர்ந்து அவர்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சந்திது இவர்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர். அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் உங்களுடைய மனு வின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். நீங்கள் என்னுடைய அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது தவறு இதற்காக உங்களை கைது செய்யபட வேண்டும், இருந்தாலும் உங்களை மன்னித்து விடுகிறேன் என்று கூறி இதற்குமேல் இதுபோன்ற செயல்களில் இடுப்பட கூடாது என்று தெரிவித்து அனுப்பினார். 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுக்காப்பு போடப்படது இதில் சமார் 35க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், குறிப்பிடத்தக்கது