திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் பகுதியில் வந்தவாசி இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள பல் பொருள் அங்காடி  அருகே  இரவு, ஆண் குழந்தை ஒன்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது. அங்கிருந்த பொதுமக்கள்  ஒரு சில அழதுகொண்டு இருந்ததை கண்டு காணமல் சென்றனர். அப்போது அங்கு  கடை வைத்து இருந்தவர்கள் பல மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே உள்ளது என அருகில்  சென்று பார்த்தபோது குழந்தை பசியால் அழுவது தெரியவந்தது. பின்னர் அருகே  குழந்தையின் தாய் மற்றும்  குழந்தையின் தந்தை இருவரும் குடிபோதையில் சுயநினைவில்லாமல் கிழே விழுந்து கிடப்பதும் தெரியவந்தது. அதன் பிறகு கடைக்காரர்கள் தன்னார்வலர்களுக்கு தகவல் அளித்தனர். மேலும் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற  தன்னார்வ சேவை குழு நிர்வாகிகள் அசாரூதீன், கேசவராஜ் ஆகியோர், திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.




பின்னர், அந்த குழந்தையை மீட்டு வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு பசியால் தவித்த அந்த குழந்தைக்கு  உணவளிக்கப்பட்டது. தொடர்ந்து, குடிபோதையில் இருந்த பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மகாபலிபுரத்தை சேர்ந்த மோகன் (28) , அனுஷ்யா (23) மற்றும் அவர்களது 9 மாத குழந்தை மனீஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த சில நாள்களாக இவர்கள் இருவரும் குடிபோதையில் வந்தவாசியில் சுற்றித்திரிந்த அவர்கள் குழந்தையை சரிவர கவனிக்காமல் இருந்தது வந்தது தெரியவந்தது. எனவே, காவல்துறையினர் குழந்தை மனீஷையை குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்துக்கு வந்த திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரிடம் குழந்தையை காவல்துறையினர் ஒப்படைத்தனர். 



 


இதுகுறித்து குழந்தையை மீட்ட அசாருதீன் சஜாத் கூறுகையில்: ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் இல்லை, என பல தம்பதினர்கள், அந்தந்த இன மதக் கடவுள்களை  பிரார்த்தனை செய்து வருகின்றனர் ஆனால். தற்போது  வந்தவாசி பகுதியில் இளம் தம்பதியர்கள் குடிபோதையில் தள்ளாடி  நடுரோட்டில் விழுந்து கிடைக்கின்றனர். இவர்கள்மட்டும் அப்படி விழுந்து கிடைக்கவில்லை,  அவர்கள் பெற்ற ஆறு மாத குழந்தையை கண்டுகொள்ளாமல் விட்டது மிகப் பெரிய வருத்தத்தை அளிக்கின்றது.  இதற்கு காரணம்  தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற கொடிய  விஷயங்களில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முடியும்.


இதற்கு முன்பு இருந்த மக்களின் கலாச்சாரம் குடிபோதைக்கு அடிமை ஆகாமல் இருந்தனர். ஆனால் அப்படியே குடித்தாலும் ஆண் நபர்கள் மட்டுமே குடித்து வந்தனர். கடந்த 2018 ஆண்டிலிருந்து பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் எனக்கூறி ஆண்களுக்கு நிகராக குடி போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் ஆண் நண்பரும,  பெண்ணின் நண்பரும்  குடிபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதை அறியாத பெற்றோர்கள் இவர்கள் இருவருக்கும்  திருமணம் செய்து வைத்துள்ளனர்.  



இந்நிலையில்  இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது, இந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு குடித்து விட்டு நடுரோட்டில் போதையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகின்றது. இந்த அவல நிலையில் இருந்து தமிழ் நாட்டு மக்களை காப்பாற்ற, தமிழக அரசு உடனடியாக தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என தெரிவித்தார்.